சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
இதில், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘அல் – -ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அண்மைய நாட்களில் சோமாலியாவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.