News

ஜனாதிபதி ரணிலுடன் கைக்கோர்க்கும் சஜித்!

எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 69 இலட்சம் மக்கள் ஆணை பெற்ற முன்னாள் ஜனாதிபதி கூட மக்கள் கருத்துக்கு பணிந்து நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதனை இந்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார் எனவும், இந்நியமனம் 22 மில்லியன் மக்களின் விருப்பத்தின் பிரகாரமின்றி மாறாக கோட்டாபய ராஜபக்ஸவுக்கு சாதகமான தரப்பால் மேற்கொள்ளப்பட்டது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்கள் கருத்துக்கு பணிந்து செயற்பட்டத்தாகவும், 225 பேரும் ஒன்றே என்ற சமூகக் கருத்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது அரசு மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்பொழுதும் ஆதரவை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top