தென்கொரியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற தொடங்கி உள்ளது. இதன்படி ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று எழுச்சி பெறத்தொடங்கி உள்ளது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு சராசரி 72 ஆயிரத்து 735 ஆக இருந்தது. அங்கு நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் புதிதாக 1 லட்சத்து 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 99 ஆயிரத்து 327 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு கொரோனாவின் கடுமையான பாதிப்பினால் 177 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். நேற்று ஒரு நாளில் 25 பேர் தொற்றால் இறந்தனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.13 சதவீதம் ஆகும்.