தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 140-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இதனிடையே, உக்ரைனில் கைப்பற்றியுள்ள நகரங்களில் ரஷியா தங்கள் படைகளையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனின் நோவா கஹ்வ்கா நகரை கைப்பற்றிய ரஷியா அங்கு ஆயுதக்கிடங்கு அமைத்துள்ளது.
அந்த ஆயுதக்கிடங்கை குறிவைத்து உக்ரைன் ராணுவம் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த ராக்கெட் தாக்குதலில் ரஷிய ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது