இலங்கையில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவுகளை உட்கொள்வதில்லை என்பதுடன், தற்போதைய நிலைமை மோசமடையக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டில் 6.3 மில்லியன் இலங்கை மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.7 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்
மேலும் 6.7 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்பதுடன், ஜூன் முதல் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு உணவை உட்கொள்வதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவிகள் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு 63 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்ற போதிலும் வெளிநாட்டு அரசாங்கங்களின் நன்கொடைகள் மூலம் 20.14 மில்லியன் டொலர்களை மாத்திரமே உலக உணவுத் திட்டம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஐ.நா மேலும் குறிப்பிட்டுள்ளது