பிரான்சில் பாரீஸ் நகரில் பார் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் சிச்சா என்ற பார் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் எவரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை அர்ராண்டிசெமண்ட் மேயர் பிரங்காயிஸ் வாக்லின் உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த காட்டுமிராண்டித்தன செயலை செய்ததற்கான உள்நோக்கம் பற்றி இந்த சூழ்நிலையில் எதுவும் தெரியவரவில்லை. துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய மற்றொரு நபரை தேசிய போலீசார் தேடி வருகின்றனர் என கூறியுள்ளார்.