News

புதிய அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச கருத்து!

 

 

ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் வந்தாலும் அது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் பங்கேற்பீர்களா என ஊடகவியலாளர்கள் முன்னாள் பிரதமரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்,

கட்சி இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டுவரவில்லை எனவும் கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு அமையப் பெறும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.

தற்போது போராடியது போதும், என தாம் நினைப்பதாகவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top