News

மாலைதீவிலும் கோட்டாபயவுக்கு மக்கள் எதிர்ப்பு: நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

 

 

மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு

இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கோட்டாபயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடும் எதிர்ப்பு வெளியானதை தொடர்ந்து கோட்டாபய தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா அதிபர் கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும் கோட்டாபயவை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top