News

மியான்மரில் முன்னாள் எம்.பி. உட்பட ஜனநாயக செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு மரண தண்டனை

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களால் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட ஜனநாயக செயற்பாட்டாளர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனையாக இது அமைந்துள்ளது.

எனினும் அவர்களது மரண தண்டனை எங்கு? எப்போது? நிறைவேற்றப்பட்டது என்பதை மியான்மர் இராணுவம் தெரிவிக்கவில்லை.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்நாட்டு இராணுவம், கடந்த ஆண்டு பெப்ரவரி 1-ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மியான்மர் அரச தலைவர் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் இராணுவ பலத்தைக் கொண்டு அடக்கப்பட்டது. இராணுவத்தினரால் 2,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் இராணுவ அராஜகங்களுக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சி அமைப்புகள் உருவாகின. இந்த கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர்.

இதனையடுத்து முந்தைய அரசின் எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்களை பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்து மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் சிறையில் அடைந்தனர்.

ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் ஆட்சியில் எம்.பி.யாக இருந்த பியோ ஜெயா தாவ், இராணுவத்தினரை துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக கூறி ஜனநாயக ஆர்வலரான கோ ஜிம்மி என்பவரையும், இராணுவ உளவாளியை எரித்துக் கொன்றதாக ஹலா மியோ ஆங் மற்றும் ஆங் துரா சாவ் ஆகியோரையும் இராணுவம் கைது செய்தது.

அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த மியான்மர் இராணுவ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 4 பேரையும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்த அரசியல் கைதிகள் 4 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. வல்லுநர்கள் மற்றும் கம்போடியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மியான்மர் இராணுவத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

எனினும் இதனை நிராகரித்த மியான்மர் இராணுவம், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பியோ ஜெயா தாவ் உள்பட 4 பேரையும் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இராணுவ ஆட்சியாளர்களின் இக்கொடூர செயலை பல உலக நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top