News

மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள கொழும்பு போராட்டக்களம்! குவியும் மக்கள்

 

 

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தற்சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக் களத்தில் குழுமியிருப்பதாக தெரியவருகின்றது.

தொடர்ந்து அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை காரணமாக இலங்கை மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர்.

 

 

இந்த நிலையில் மக்கள் கடும் கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது கொழும்பு காலி முகத்திடலை நோக்கி பெருந்திரளான மக்கள் வருகைத் தருவதாகவும் தற்போதுவரை அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top