உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு கனடாவும் தற்போது தடை விதித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நோட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அடுத்தடுத்து விதித்து வருகின்றனர்.
அந்தவகையில் தங்கம் மற்றும் தங்கம் தொடர்பான பொருள்களை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தங்களது புதிய பொருளாதார தடை சமீபத்தில் அறிவித்தது.
ஐரோப்பிய யூனியனின் இந்த தடையை தொடர்ந்து தற்போது மேற்கத்திய நாடான கனடாவும் ரஷ்யாவின் தங்கம் மற்றும் தங்கம் தொடர்பான பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
ரஷ்யா மீது அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் ரஷ்யா, தற்போது கனடாவின் இந்த தடையால் மேலும் கூடுதலான அழுத்தத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.