News

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி!

 

 

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

பயணங்களைத் தடுக்கும் கொள்கையாக, பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளில் வந்த சிலரை ருவாண்டாவில் தஞ்சம் கோர அனுப்ப கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது.

ஆனால், இது புலம்பெயர்ந்தவர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று உட்துறை விவகாரக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டயானா ஜான்சன் கூறினார்.

இந்த திட்டம் ஆபத்தான கடவுகளை நிறுத்தும் என்று அரசாங்கம் கூறியது. ருவாண்டா கொள்கை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மோசமான மக்கள் கடத்தல்காரர்களை தடுக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறினார்.

இருப்பினும், கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு இதுவரை புலம்பெயர்ந்தோர் யாரும் அனுப்பப்படவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 47பேர் ருவாண்டாவுக்குச் அனுப்படுவார்கள் என்று கூறப்பட்டது, ஒரு விமானம் ஜூன் 14ஆம் திகதிக்கு முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான சட்ட சவால்கள் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 14,000க்கும் (ஜூலை 11ஆம் திகதி திங்கட்கிழமை மட்டும் 442பேர் உட்பட) மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளனர். மேலும் ருவாண்டா அறிவிப்பு பயனுள்ளதாக இல்லை என்று உட்துறை குழு தெரிவித்துள்ளது.

‘இந்தக் கொள்கையானது புலம்பெயர்ந்தோரைக் கடப்பதைத் தடுக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று உட்துறை குழு அறிக்கை கூறியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top