Canada

ரொறன்ரோவில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணம்; அதிர்ச்சியில் மக்கள்

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணித்துள்ளமை வைத்தியசாலை வலையமைப்பில் அதிர்ச்சியை ஏற்ப்ப்படுத்தியுள்ளது.

டொக்டர் ஜாகுப் சௌகீ (Dr. Jakub Sawicki,) , டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr. Stephen McKenzie) மற்றும் டொக்டர் லோர்ன் சீகால் (Dr. Lorne Segall) ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளனர்.

நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் இந்த மருத்துவர்கள் அளப்பரிய சேவையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணம்; அதிர்ச்சியில் மக்கள் ! | Hospital Network Mourns Loss Of Three Doctors

இந்த மருத்துவர்கள் மூவரும் அடுத்தடுத்து மரணிப்பதற்கு கோவிட் தடுப்பூசிகளே காரணம் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மருத்துவர்களும் கோவிட் தடுப்பூசி காரணமாக மரணித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ரொறன்ரோவில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணம்; அதிர்ச்சியில் மக்கள் ! | Hospital Network Mourns Loss Of Three Doctors

கடந்த 17ம் திகதி, டொக்டர் லோரன் சீகல் (Dr. Lorne Segall) 49ம் வயதில் நுரையீரல் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 18ம் திகதி டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr. Stephen McKenzie) நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 21ம் திகதி டொக்டர் ஜாகொப் சௌகீ (Dr. Jakub Sawicki,) உயிரிழந்தார். இந்த மூன்று மருத்துவர்களின் சேவையை பாராட்டியும் அவர்களுக்கு இரங்கல் வெளியிட்டும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பாரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top