News

விமான விபத்து கிரீஸ் கிரீசில் சோகம் – சரக்கு விமானம் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

 

 

கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் விமான நிலையத்திற்கு 40 கி.மீட்டருக்கு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக செர்பிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைத்தனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top