ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலேயே, இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதவி துறக்கும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, நாட்டில் சில இடங்களில் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.
அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்தியவர்களால் ஜனாதிபதி மாளிகை மற்றும், ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நகர்ப் பகுதியில் இளைஞர்களால் வெடி கொழுத்தி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் வடமாகாணத்தின் பிற பகுதிகளில் சிலவற்றிலும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.