அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்வோகெட்டா நகரில் மிகப்பெரிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் இந்த பூங்காவில் வழக்கம்போல் மக்கள் திரண்டு பொழுதை கழித்து வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.
அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? தாக்குதல் நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? என்பன குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.