கொழும்பு- காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுள், கொழும்பு 15ஐச் சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. .