News

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம்- காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்

 

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்குள் அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்ட காரர்கள் கூறியுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படும் போராட்டத்தை நசுக்க முயல்வதாகத் தெரிவித்த அவர்கள் படையினருக்கு தாம் பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புதிய வடிவில் போராட்டம் தொடரப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top