உலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் நிதி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல் குரங்கு அம்மை பரவலை தடுக்க அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா முன்னதாக, முதன்முதலாக நியூயோர்க், இல்லினாய்ஸ் மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டன.
குரங்கு அம்மை பரவல் தீவிரமாகியதையடுத்து தற்போது பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது
70க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில், மட்டும் 6,600பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..