News

அமெரிக்காவில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் சிறுவர்கள் மூவர் உட்பட 10 பேர் மரணம்!

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த வீடொன்றுக்குள் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் ஐந்து, ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என பென்சில்வேனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

 

வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தீப்பிடித்ததாகக் கருதப்படுகிறது.

இருந்தவர்களில் பலர் நெஸ்கோப்க் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஹரோல்ட் பேக்கர் என்பவரின் குடும்பத்தினராவர்.

மகன், மகள், மாமனார், மைத்துனர், மைத்துனர், மூன்று பேரக்குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக ஹரோல்ட் பேக்கர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் தீப்பற்றிய வீட்டில் வசிக்கவில்லை. கோடைகால விடுமுறைக்காக வந்து தங்கியிருந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

 

 

பொலிஸ் மோப்ப நாய்கள் உதவியுடன் எரிந்து-இடிந்த கட்டிடத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டில் இருந்த 3 பேர் பாதுகாப்பாக தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலடெல்பியாவிற்கு வடமேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள நெஸ்கோப்க்கின் கிராமப்புற சமூகத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் (06:30 GMT) தீ விபத்து ஏற்பட்டது.

 

 

தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். ஆனால் தீ தீவிரமாகப் பரவியதால் அவர்களால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என பென்சில்வேனியா மாநில பொலிஸ் லெப்டினன்ட் டெரெக் பெல்ஸ்மேன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top