ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய சிறுபான்மையின ஷியா பிரிவினர் அதிகம் பேர் வசிக்கும் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள், நபிகள் நாயகத்தின் பேரனாக கருதப்படும் ஹுசைன் அவர்களின் விழாவை அனுசரிக்க ஒன்றுகூடிய இடத்தில் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சன்னி முஸ்லீம் பிரிவின் பயங்கரவாத அமைப்பான, ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று காபூலில் அவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இந்த அமைப்பினர் இஸ்லாமிய சிறுபான்மையின பிரிவுகள் மற்றும் பிற மத சிறுபான்மையினரை குறிவைத்து, அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.