News

இங்கிலாந்து: லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

 

லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

ஆனால் வேகமாக தீ பரவியதால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். ரெயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் ரெயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top