இரண்டு லொறிகளுக்கு மத்தியில் நசுங்கிய மினி பஸ்…ஓட்டுநரின் கவனக்குறைவால் நேர்ந்த பரிதாபம்
ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லொறி மோதியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லொறி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தற்போது வரை வெளிவந்துள்ள தரவுகளின் அடிப்படையில், கனரக சரக்கு லொறியின் ஓட்டுநர் சரியான நேரத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்காததால் உல்யனோவ்ஸ்க் பகுதியில் நின்றுக் கொண்டு இருந்த மினி பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக Ulyanovsk பிராந்தியத்தின் உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பவம் நடந்த இடத்தில் சாலைப் பணிகள் நடந்ததால் மினி பஸ் முன்னேறி செல்வதற்காக வரிசையில் காத்திருந்தது என்றும், லொறி மோதியதால் மினிபஸ் இரண்டு லொறிகளுக்கு இடையே சிக்கியது என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் இரண்டு லாரிகளுக்கு இடையில் மினிபஸ் ஒன்று சிக்கியது மற்றும் அவசர சேவை பணியாளர்கள் தட்டையான வாகனத்தை பின்னர் ஆய்வு செய்து போன்றவை இடம்பெற்று இருந்தன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரஷ்யாவின் புலனாய்வுக் குழு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கொல்லப்பட்டவர்களில் லாரி ஓட்டுனரும் அடங்குவதாக சட்ட அமலாக்க வட்டாரத்தை மேற்கோள்காட்டி TASS தெரிவித்துள்ளது.