News

இலங்கையர்கள் 46 பேரை உடன்திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா

 

 

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றிவாறு அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடுகளுக்கு பயணத்துள்ளனர். அத்துடன் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இலங்கையச் சேர்ந்த 46 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று ஜூலை மாதம் 21 ஆம் திகதி அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜூலை 6 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து மீன்பிடி படகில் பயணத்தை ஆரம்பித்தாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதனையடுத்து 46 பேரை ஏற்றிய அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

விசாரணைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு

அவர்கள் மேலதிக விசாரணைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஆயிரத்து 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 183 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top