ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வழிபாட்டு தலத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்தது. அதை தொடர்ந்து வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இருப்பினும் 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 3 சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.