உடன் நடைமுறைக்கு வரும் வகையில், அவசரகால சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.