2009 யுத்த களமுனையில் நின்ற போராளிகள் மற்றும் பொதுமக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்விற்கான மிக முக்கியமான ஆவணங்களை திரட்டிவருவதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகள் பேரவையினுடைய கடுமையான அழுத்தங்களை தவிர்த்து அதன் செல்நெறியை தமது பக்கம் திருப்பிக்கொள்ள ரணில் விக்ரமசிங்க முயற்சிகின்றார்.
அத்துடன் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்ள முயற்சிக்கின்றார் எனவும் இன்று இலங்கையில் இருக்கும் வங்குரோத்து நிலையை கருத்திற்கொண்டு புலம்பெயர் அமைப்புக்களுடன் உறவுகளை பேண முயற்சிக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.