2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்து கனடாவுக்கு தங்கள் சேவையை ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் Canadian Immigrant என்னும் பத்திரிகை அளிக்கும் கௌரவமாகும்.
Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெறுவோர் பட்டியலில் ரொரன்றோ பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
அவர்கள், பிலிப்பைன்சிலிருந்து வந்த Patrick Alcedo, இந்தியாவிலிருந்து வந்த Diana Alli D’Souza, பஹாமாஸ் தீவுகளிலிருந்து வந்த Raquel Fox, இலங்கையிலிருந்து வந்த Sivakumar Gulasingam, நேபாளத்திலிருந்து வந்த Bhutila Karpoche, அல்ஜீரியாவிலிருந்து வந்த Mohamed Lachemi, தென் கொரியப் பின்னணி கொண்ட Paul Sun-Hyung Lee, பிரேசில் நாட்டிலிருந்து வந்த Arnon Melo ஆகியோர் ஆவர்.
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள சிவகுமார் குலசிங்கம் இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital என்னும் மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார்.
அப்படி ஒரு முன்னணி மருத்துவராக இருந்த அவர், 2008ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகு, மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது.
ஆனால், அரும்பாடுபட்டு, தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.