Canada

கனடாவில் 3 கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை

 

 

கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மொன்றியலின் செயின்ட் லாவுரான்ட் ப்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொலைச் சந்தேக நபர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்னர்.

மூன்று படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கியூபெக் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கச் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆயுதம் தாங்கிய நபர் ஒருவருடன் பொலிஸார் கைகலப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் சம்பவத்தில் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மொன்றியல் மற்றும் லாவல் பகுதகளில் அண்மையில் இடம்பெற்ற மூன்று படுகொலைச் சம்பவங்களுடன் உயிரிழந்த நபருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல்களை வெளியிடுவதாகவும் மொன்றியல் மேயர் வெலரி ப்ளான்டி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top