கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என தெரியவந்துள்ளது. இந்த 11 பேரையும் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கனடா காவல்துறை, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் காவல்துறை மற்றும் பி.சி ராயல் கனடியன் மௌண்டட் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.
கனடா வெளியிட்ட மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியல்: ஆசிய நாட்டவர்கள் 9 பேர் | Most Violent Gangster List Of Canada Police
இந்த 11 பேரும், பல்வேறு மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் குழுக்களாக இணைந்து செய்திருக்கும் குற்றங்கள் கனடாவில் பேராபத்தை ஏற்படுத்துபவை என்றும், இவர்களால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த 11 பேர் பட்டியலில், ஷாகியேல் பாஸ்ரா (28), அமர்பிரீத் சாம்ரா (28), ஜக்தீப் சீமா (30), ரவ்ந்தர் சர்மா (35) பரிந்தர் தலிவால் (39) ஆண்டி செயின்ட் பியர் (40) குர்பிரீத் தாலிவால் (35) ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் (35) 40), அம்ரூப் கில் (29), சுக்தீப் பன்சால் (33), சும்திஷ் கில் (28) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்