கலப்பு நீதிமன்றத்தை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுமாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் ஆசிய தலைவர் ரோரி முன்கோவனின் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், அவரது கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்வாறான கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பு சட்ட அதிகாரம் வழங்கவில்லை என அரசாங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை ஒருதலைப்பட்சமாக 58 இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரோரி முங்கோவன் உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவை அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் ஹைபிரிட் நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.