News

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடரும் போராட்டம்! இதுவரை 121 உறவுகள் உயிரிழப்பு

 

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் (12.08.2022) நாளையுடன் 2000 நாட்களை கடந்தும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top