News

கிரிமியாவில் ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து; டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா..?

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் கடந்த வாரம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவத்தின் வெடிமருந்து கிடங்கில் கடந்த வாரம் 9ம் தேதியன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

க்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலைகொண்டிருந்த ரஷிய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின.

அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை என்று ரஷியா தெரிவித்திருந்தது. எனினும், கிரிமியாவில் உள்ள உக்ரைனுக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்கள் இராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரஷியா சில நாசகாரர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது. மேலும் இந்த தாக்குதலில், உக்ரைன் தலையீடு இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் வடக்கு கிரிமியாவில் உள்ள மின் இணைப்புகள், மின்சார துணை நிலையம், ரெயில்வே உள்கட்டமைப்பு மற்றும் சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாசகாரர்கள் எவ்வாறு குண்டுவெடிப்பைத் தூண்டினார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை, இருப்பினும் அவர்கள் வெடிமருந்து கிடங்கில் குண்டு வீச சிறிய டிரோன்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ரஷிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை உக்ரைன் தரப்பு உறுதி செய்யவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top