‘‘எரிகிறதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும்’’ என்ற கூற்றுக்கிணங்க இலங்கையில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த போராட்டங்களை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க நரி தந்திரங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்த அரகல,கோட்டா கோ கம போன்ற போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களை குறி வைத்து போராட்டங்களை திறைமறைவில் அடக்கி ஒடுக்கியிருந்தார்.
இலங்கையர்களை பொறுத்தவரையில்,ஒன்பதாம் திகதி என்பது அரசியல் புரட்சிக்காக ஒதுக்கப்பட்ட நாளாக நடந்த சில மாதங்களாக பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 9ஆம் திகதி மாற்றம் நிகழாமல் போனமைக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் ராஜதந்திரங்களே காரணமாக அமைந்தது.
இதேவேளை,கைகள் கட்டப்பட்ட நிலையில்,கடல்களில் மிதக்கும் உடல்கள்,நடு வீதியில் கதற கதற இழுத்துச்செல்லப்படும் கைதுகள் ரணில் விக்ரமசிங்க யார் என்பதை போராட்டக்காரர்களுக்கு காண்பித்து போராட்டம் என்பது ஆபத்தான விடயம் என்ற தோற்றப்பாட்டினை காண்பித்து பொது மக்களை அடக்கி வைத்துள்ளார்.