News

கோட்டாபயவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் முன்னர் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் தங்கியிருக்கின்றார். அவர் விரைவில் இலங்கை வரவுள்ளார். அத்துடன் நீண்டகாலத்திற்கு அமெரிக்காவில் குடியேற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த போராட்டங்கள் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி உச்சமடைந்த நிலையில், கோட்டாபய நாட்டில் இருந்து தப்பிச் சென்றார். மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். சிங்கப்பூரில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்த அவர், கடந்த 11 ஆம் திகதி இரவு தாய்லாந்து சென்றார். தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top