News

சதி செய்யும் ரணில் – கடும் வருத்தத்தில் கோட்டாபய

 

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவதற்கு காத்திருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் அதற்கான நேரம் அமையவில்லை என்று கூறி அவரை தற்காலிகமாக தாய்லாந்துக்கு அனுப்பியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

கோட்டாபயவை மீண்டும் அழைத்து வருவோம் என பிரசாரம் செய்யும் பெரும் எண்ணிக்கையிலான மகா சங்கத்தினர் கோட்டாபயவை வரவேற்க விமான நிலையத்தினை தயார்படுத்துவது குறித்து புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட  தகவல்களை அடுத்து ரணில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோட்டாபயவுக்கு உதவியவர்களே ரணில் கோட்டாபயவை சிறுமைப்படுத்தியதாக கோட்டாபயவுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் உள்ள தனது மகனைப் பார்வையிட இலங்கையின் சாதாரண பிரஜையாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோட்டாபயவுக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க முடிந்தால், கோட்டாபயவுக்கு இராஜதந்திர மட்டத்தில் அமெரிக்கா செல்ல முடியும் என ரணில், கோட்டாபயவிடம் மாற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆனால் அந்த பதவிக்கு கோட்டாபயவினாலேயே நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் இருப்பதால் அவருடன் பேசி உரிய பதவியிலிருந்து விலகுவதற்கு சம்மதம் கோருமாறு கோட்டாபயவிடம் ரணில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள அந்த நண்பரிடம் கோட்டாபய இந்த உதவியை செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால் நீதிபதி கோட்டாபயவிடன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோட்டாபயவுக்கு நெருக்கமானவர்கள், கோட்டாவை அமெரிக்காவிற்கு அனுப்பும் உண்மையான எண்ணம் ரணிலுக்கு இருந்தால் தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி, நிரந்தர பிரதிநிதியை நீக்கிவிட்டு கோட்டாபயவை நியமிக்கும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோட்டபயவினால் நியமிக்கப்பட்ட சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தெமிய அபேவிக்ரமவை ரணில் பதவி நீக்கம் செய்ததனை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top