News

சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல்

சீன உளவுக் கப்பல் “யுவான் வாங் 5” நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ம் திகதி சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த சீன உளவுக் கப்பல் தற்பொழுது இந்தியவுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

பின்னணியில் மகிந்தவின் காய் நகர்தல்
சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல் | Chinese Spy Ship Yuan Wang5 Mahinda Rajapaksa

சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா
இந்நிலையில் தனது பாதுகாப்புக்கு அச்சம் என இந்தியா பல முறை தெரிவித்திருந்தும் அனுமதி வழங்குவது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தும், சீனக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

இதன் பின்னணியில், மகிந்தவின் காய் நகர்தல்களே உள்ளன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துரைக்கிறனர்.

குறித்த சீனாவின் உளவுக்கப்பலானது, இலங்கைக்கு அருகில் 600 கி.மீ தூரத்தில் சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்து, இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் நுழைய அனுமதி கோரியது.

ஆனால், குறித்த கப்பலுக்கு இந்திய அமெரிக்க மட்டங்களில் நிலவிய எதிர்பு காரணமாக அனுமதி வழங்குவதில் இலங்கை அரசு நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இவ்வாறிருக்க.. சீன தூதுவர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகிய இருவரும் கப்பல் விவகாரம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

“அனுமதிக்கவில்லை என்றால்” எச்சரித்த மகிந்த ராஜபக்ச
சீன உளவுக்கப்பல் விவகாரம்..! அனுமதி வழங்கியதன் பின்னணியில் மகிந்த: வெளிச்சத்துக்கு வந்த தகவல் | Chinese Spy Ship Yuan Wang5 Mahinda Rajapaksa

சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா
மறு நாள் காலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான சாகல ரத்நாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்ச குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

அதாவது, கப்பலை நாட்டிற்கு அனுமதிக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மூடப்படும், சீனாவினால் இலங்கை மீது தடை கொண்டு வரப்படும், போர்ட்சிட்டியில் இருந்து சீனா விலகிவிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இந்தியவுக்கு சவாலாக மற்றும் பாரிய அச்சத்தை தோற்றுவித்திருக்கும் சீனக்கப்பலின் இலங்கை வரவின் பின்னால் மகிந்த ராஜபக்சவே உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top