News

ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என ஜனதா விமுக்தி பெரமுன எச்சரித்துள்ளது.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க தற்போது செய்து வரும் மனித உரிமை மீறல்களால் இந்த ஆபத்து அதிகரித்து வருவதாக இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.ரணிலையும் அவரை பதவிக்கு கொண்டு வந்தவர்களையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு தயாராவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய பிரச்சினைக்குள் நாடு தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top