News

ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது!ரணில் விக்ரமசிங்க

 

 

ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கைது சட்டத்துடன் தொடர்புடையது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க அவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

முறைமை மாற்றத்தை வலியுறுத்தும் போராட்ட உறுப்பினர்களை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் போராட்டத்தில் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உண்டு, அதில் உள்ள நல்ல அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் திங்கட்கிழமை பிணையில் அனுமதிக்கப்படுவார் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top