News

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

 

 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று லாலர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள்

 

மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் நேற்று மாலை தமது தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவித்தே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இதேவேளை,புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி கட்சியொன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top