அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஊடக அறிவித்தல் விடுத்துள்ள பொலிஸார், வசந்த முதலிகேவிற்கு அடைக்கலம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.