News

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்- 4 வீரர்கள் உயிரிழப்பு !

 

 

பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்தனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 2 பேர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். தெஹ்ரீக்-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டபோதிலும், பழங்குடியின மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top