2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் பிரான்ஸில் வைத்து தன்னை பல தடவைகள் கொலை செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவினால் தான் எதிர்நோக்கிய இன்னல்களுக்கு ஆதரவாக செயற்பட்ட பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பலருக்கு கோட்டாபய ராஜபக்ச செய்த பாவத்திற்கு தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருவதுடன்,ரணிலின் புதிய அரசாங்கம் தற்போது ஆட்சியில் உள்ளது.இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தமட்டில் சுமந்திரன் என்பவர் யுத்த காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடியை வேடிக்கை பார்த்தவர் என்பது யாவரும் அறிந்த விடயம்.
இவ்வாறான நிலையில்,சாணக்கியனுக்கு தற்போது நல்லதொரு எதிர்காலம் உள்ளது.இருப்பினும் அவர் சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்பட்டு தனது எதிர்காலத்தை இழந்து வருகின்றார் என்றும் குறிப்பட்டுள்ளார்.