Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்ட இலங்கையர்

 

 

கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் Bakir Junaideen (57).

இலங்கையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Junaideen, சொந்தமாக கணினி தொடர்பிலான தொழில் ஒன்றை செய்துவந்தார். கடந்த வார இறுதியில் Junaideen குடும்பத்தினர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பொழுபோக்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது Junaideenம் அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள். அப்போது திடீரென Junaideen பயணித்த படகு கவிழ்ந்து, அவருடைய மகன் Zaid தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.

உடனே மகனைக் காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்திருக்கிறார் Junaideen. அங்கே நடந்த குழப்பதைக் கண்ட சிலர் உடனடியாக Zaidஐக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், பரிதாபம், Junaideen என்ன ஆனார் என ஒருவரும் கவனிக்கவில்லை.

பிறகு Junaideenஇன் மனைவியான Farzanaதான், தன் கணவரைக் காணவில்லை என்று பதற, உடனே சிலர் தண்ணீருக்குள் குதித்து அவரைத் தேடத் துவங்கியிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக அங்கு பணியில் இல்லாத தீயணைப்புத் துறையினர் இருவர் இருக்க, அவர்கள் தண்ணீரில் குதித்து Junaideen தண்ணீரிலிருந்து மீட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள்.

உடனடியாக Junaideen மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுயநினைவில்லாமல் இருந்த Junaideenக்கு செயற்கை சுவாசமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது மூளை முதலான உள்ளுறுப்புகள் செயலிழந்துவிட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து புதன்கிழமை Junaideen உயிரிழந்தூள்ளார்.

Junaideen குடும்பத்தில் அவர் ஒருவர்தான் வேலைபார்த்து வந்துள்ளார். ஆகவே, அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காகத் திண்டாடக்கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறப்பட்டு வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top