இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் இந்த சந்திப்பு தொடர்பான தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
இதன்படி ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழர் தேசியப் பிரச்சினை, தேசிய பொருளாதார நெருக்கடி, புலம்பெயர் தமிழர் விவகாரம், நலிவுற்ற பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.