News

பெல்ஜியம் 17 வயதில் உலகை தனியாக வலம் வந்து சாதனை படைத்த இளம் விமானி

5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேக் ரதர்போர்ட் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்றார்.

சோபியா : பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான்.

மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான ‘ஷார்க்’ என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட காலம் நீடித்தது.

அதன்படி கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரதர்போர்ட் நேற்று பல்கோரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

மேக் ரதர்போர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் கரவொலிகளை எழுப்பியும், ஆரவாரம் செய்தும் மேக் ரதர்போர்ட்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு தனது 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை அடைந்த மேக் ரதர்போர்ட் தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் 19 வயதில் விமானத்தில் தனியாக உலகை சுற்றி வந்த இளம் விமானி என்கிற பெருமைக்குரியவர் ஜாரா ரதர்போர்ட். இவர் வேறு யாரும் அல்ல, மேக் ரதர்போர்ட் மூத்த சகோதரி தான். அதாவது, தனது அக்காவின் சாதனையைதான் மேக் ரதர்போர்ட் முறியடித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top