News

போரின் ஆட்டத்தை மாற்றியமைக்கும் புதிய ஆயுதங்கள்: உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா திட்டம்

 

 

நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் போர் தாக்குதல்களை மாற்றியமைக்க எத்தகைய புதிய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பலாம் என்று அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என்று பென்டகன் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு ராணுவ உதவுகள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அவற்றிலும் அமெரிக்கா தங்களது தனிப்பட்ட சிறப்பான போர் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி ஆதரவு அளித்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அடையாளம் தெரியாத பென்டகன் மூத்த அதிகாரி, உக்ரைனுக்கு மேலும் 775 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) ஹோவிட்சர்களுக்கான கூடுதல் வெடிமருந்துகள் ஆகியவற்றை அமெரிக்கா இந்த தொகுப்பில் வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், போரின் ஆட்டத்தை மாற்றியமைக்கும் தேசிய மேம்பட்ட மேற்பரப்பு-விமான ஏவுகணை அமைப்புகளை (NASAMS) உக்ரைனுக்கு மாற்றுவதற்கு நாடு தேர்வு செய்யலாம் என்றும், உக்ரேனிய இராணுவத்தின் வெற்றியை உறுதி செய்வதே முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய அதிகாரிகள் உக்ரைன் Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள Energodar என்ற நகரத்தில் வேலைநிறுத்தங்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top