News

மனித உரிமைகளை மீறும் ரணில் அரசு -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

 

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தாமல், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான குடிமக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் பாதுகாப்பதை உறுதிப்படுத்த, கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்துமாறு 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரிடம் கோரியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் அண்டனி பிளிங்கன் மற்றும் USAID நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில்,இலங்கைக்கு தேவைப்படும் நேரங்களில் அர்த்தமுள்ள உதவிகளை வழங்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவசரகால பிரகடனத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டத்தை விதித்ததாகவும், மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு வெடிமருந்துகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்ததாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை முழுமையாக உள்ளடக்குமாறு கோரியுள்ளனர்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது மற்றும் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை மேம்படுத்துவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

மேலும் இலங்கை மக்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, மருத்துவம் மற்றும் எரிபொருள் உதவிகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கு USAID உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் கோரியுள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் USAID புதிய மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவியாக $11.75 மில்லியன் வழங்கியதாக கடிதம் மேலும் வலியுறுத்துகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top