அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் வின்ட்சர் ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பயங்கரமான இந்த சம்பவத்தின் சிசிடிவி கார்ச்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் வின்ட்சர் ஹில்ஸ் பகுதியில், வியாழனன்று (ஆகஸ்ட் 4) ஏற்பட்ட பயங்கரமான பல வாகன விபத்தில் மூன்று பெரியவர்கள், ஒரு கைக்குழந்தை மற்றும் கருவில் இருந்த குழந்தை இறந்தது மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை பிரிவுகள், சவுத் லா ப்ரியா அவென்யூ மற்றும் ஸ்லாசன் அவென்யூ பகுதிக்கு பிற்பகல் 1:40 க்கு முன்னதாக, லேடெரா பூங்காவிற்கு அருகில் அழைக்கப்பட்டன.
முதலில் தீ விபத்து என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
Video of accident at Slauson/La Brea pic.twitter.com/eiRiejQTi5
— Downtown LA Scanner (@DowntownLAScan) August 4, 2022
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, அதிவேகத்தில் வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஒன்று, சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையிலும் தெற்கு லா ப்ரியா அவென்யூவில் சாலை கடந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளனர், இருப்பினும் அவர்களின் காயங்களின் அளவு உடனடியாகத் தெரியவில்லை.
விபத்தின் காரணம் விசாரணையில் உள்ளது, மேலும் சவுத் லா ப்ரியா அவென்யூ மற்றும் ஸ்லாசன் அவென்யூவின் சந்திப்பு காலவரையறை இன்றி மூடப்பட்டது.