2020 முதல் பரவும் அசல் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் துணைத் திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய மேம்படுத்தப்பட்ட மொடர்னாவின் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிக்கு (Spikevax bivalent Original/Omicron) பிரிதானியா அங்கீகாரம் அளித்தள்ளது.
இதன் மூலம் அசல் கொரோனா மற்றும் திரிவுகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடாக பிரிட்டன் உள்ளது.
இரண்டு கொரோனா வைரஸ் வகைகளை ஒரே தடுப்பூசியில் கட்டுப்படுத்தும் நோக்கில் மொடர்னா தயாரித்த இந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (MHRA) நேற்று அங்கீகாரம் அளித்தது.
இந்த பூஸ்டர் தடுப்பூசியின் பாதி அசல் கொரோனா வைரஸூக்கு எதிராகவும் மற்ற பாதி ஒமிக்ரோன் மற்றும் அதன் துணை திரிபுகளுக்கு எதிராகவும் செயற்படும் என மொடர்னா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மொடர்னாலின் இந்த பூஸ்டர் ஒமிக்ரோனுக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தியை ஆய்வுகளில் வெளிப்படுத்தியது. அத்துடன், BA.4 மற்றும் BA.5 துணை வகைகளுக்கு எதிராகவும் சிறப்பாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது எனவும் மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.